”பாலிவுட் எல்லா வரம்புகளையும் மீறிவிட்டது” ; நோரா பதேகியின் பாடலுக்கு கங்கனா ரனாவத் கண்டனம்……!

சர்ச்சைக்குள்ளான நோரா பதேகியின் ‘சர்கி சுனார்’ பாடலுக்கு எம்.பி.யும் பாலிவுட் நடிகையைமான கங்கனா ரனாவத் தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகரான துருவ் சார்ஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கேடி : தி டெவல் . கன்னட இயக்குனர் பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ஜிஷு சென்குப்தா, ரீஷ்மா நனையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 30-ம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையில் ’கேடி : தி டெவல்’ படத்திலிருந்து ‘சர்கி சுனார்’ பாடல் என்ற பாடல் வெளியானது. சஞ்சய் தத் மாற்றும் நோரா பதேகி இணைந்து நடித்துள்ள இப்பாடலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. கன்னடம் மட்டுமில்லாமல் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி உள்ள இப்பாடலின் வரிகள் ஆபாசமாக இருப்பதாகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து இப்பாடலின் இந்தி வெர்ஷன் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எம்.பி.யும் பாலிவுட் நடிகையைமான கங்கனா ரனாவத் இப்பாடலுக்கு தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது ; பாலிவுட் ஆபாசம், தந்திரங்கள் மற்றும் கவன ஈர்ப்பு ஆகியவற்றில் எல்லா வரம்புகளையும் மீறிவிட்டது. நாடு முழுவதும் அவர்களுக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் அவர்களுக்கு வெட்கம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதுபோன்ற ஆபாசத்தையும் அருவருப்பையும் வெளிப்படுத்துவதில் இன்னும் அதிக கண்டிப்பு இருக்க வேண்டும். பாலிவுட் மீது கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.