சென்னையில் நடைபெற இருந்த பார்முலா-4 கார் பந்தயம் ஒத்திவைப்பு!

சென்னையில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், சென்னையில் மிக்ஜாம்…

சென்னையில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பெய்ததால்,  பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்புக்குள்ளானது.

இதனையடுத்து தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால், பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாகவும்,  போட்டி நடத்தப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.