தேனியில் உள்ள சந்தை மாரியம்மன் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி, 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.
தேனி அருகே உள்ள சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஆலய மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு வண்ண பட்டுடுத்தி அலங்காரத்தில் காட்சியளிக்கப்பட்டார். அதேபோல் திருவிளக்குக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிந்து மாலை அணிவித்து அலங்கரித்திருந்தனர். இந்தத் திருவிளக்கு பூஜையில் சுமார் 500 பெண்கள் கலந்து கொண்டு தங்கள் வீட்டில் இருந்து குத்து விளக்கு எடுத்து வந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.
உலகை நன்மை வேண்டியும், பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள தோஷங்கள் நீங்கிடவும், மாங்கல்ய பாக்கியம் பெற்று நாட்டிலும், வீட்டிலும் நன்மை பெறுக வேண்டியும், பெண்கள் திருவிளக்கேற்றி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மேலும் அம்மன் வழி பாடல்களை பாடி ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
—ரூபி.காமராஜ்







