திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டில் குவைத் நாட்டைச் சேர்ந்தவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனை குவைத் அரசாங்கமும் உறுதிப்படுத்தியது.
முத்துக்குமரன் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதையும், அவரின் உடலை தமிழகம் கொண்டுவர வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் பிறகு அரசின் முயற்சியால் முத்துக்குமரன் உடல் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் முத்துக்குமரன் இறப்பினால் அவருடைய மனைவி இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு தான் வறுமையில் இருப்பதாகவும், தனக்கு அரசு வேலை வேண்டுமென நாகை மாவட்டத்திற்கு வருகை தந்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இடம் கோரிக்கை வைத்தார்.
அப்போது செஞ்சி மஸ்தான் அவர்கள் முத்துக்குமரன் மனைவி வித்யா கொண்டு சென்ற மனுவில் அரசு வேலைக்கு பரிந்துரை செய்வதாக எழுதி கொடுத்தார். அதனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனிடம் வித்யா கொடுத்தார் அதற்கு மாவட்ட ஆட்சியர் அரசு வேலை கொடுப்பதற்கு உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.