திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது!

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்பனை செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமையில் ரகசிய தகவலின்படி முகமது சுல்தான், சங்கீதா, திவானி ஆகிய வனக்காப்பாளர்கள் கொண்ட…

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்பனை செய்து வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் நா.ஸ்ரீனிவாசன் தலைமையில் ரகசிய தகவலின்படி முகமது சுல்தான், சங்கீதா, திவானி ஆகிய வனக்காப்பாளர்கள் கொண்ட குழுவினர் கண்ணமடை காப்பு காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது
ஆறுமுகம் மற்றும் காசி ஆகியோர் காட்டுப்பன்றியை வேட்டையாடி எலி குத்தி கிராமத்தில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் கைது செய்தனர். 

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.