காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூருவில் திருவள்ளுவர் தினம் விமர்சையாக
கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் காங்கிரசு கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருவள்ளுவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு நகரில் உள்ள அல்சூர் ஏரி கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கர்நாடக மாநில காங்கிரசு கட்சி ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவரான சித்தராமையா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிஸ்வான் அர்சத், ஹாரிஸ், அகண்ட சீனிவாச மூர்த்தி, கே ஜே
ஜார்ஜ், உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அகில இந்திய அமைப்பு சாரா காங்கிரஸ் கட்சியின் தென் மாநிலங்களில் ஒருங்கிணைப்பாளருமான பையப்பனஹள்ளி ரமேஷ் தலைமையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. திருவள்ளுவர் தின விழாவில் பெரும்பாலான தமிழர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலை முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினர். பொய்க்கால் குதிரை பொம்மலாட்டம் ஆடல் பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெற்றிருந்தன.







