திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனுக்கு நியூஸ்7 தமிழின் ”கலை ரத்னா விருது”

சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ்7 தமிழின், ‘தமிழ் ரத்னா’ விருது வழங்கும் விழாவில், இயக்குநர் வெற்றிமாறனுக்கு கலை ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பொறுப்புடனும் பொதுநலத்துடனும் செயல்படும் நியூஸ்7 தமிழ், பல்வேறு துறைகளில்…

சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நியூஸ்7 தமிழின், ‘தமிழ் ரத்னா’ விருது வழங்கும் விழாவில், இயக்குநர் வெற்றிமாறனுக்கு கலை ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

பொறுப்புடனும் பொதுநலத்துடனும் செயல்படும் நியூஸ்7 தமிழ், பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தும் ஆளுமைகளை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ”தமிழ் ரத்னா” விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருதாளர்கள் பட்டியல், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன், நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இறுதி செய்யப்பட்டது.

Image

நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் இருந்து, கலை ரத்னா, இலக்கிய ரத்னா, இசை ரத்னா, விளையாட்டு ரத்னா, வேளாண் ரத்னா, சேவை ரத்னா, தொழில் ரத்னா ஆகிய விருதுகளோடு மாற்றுப் பாலினத்தவர்களுக்கான சக்தி ரத்னா விருதுக்கான ஆளுமைகளையும் நடுவர்கள் குழு தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து, நியூஸ் 7 தமிழின், தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.கல்லூரி பள்ளி வளாகத்தில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தமிழ் ரத்னா விருது வழங்கும் விழா, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சங்கமிக்கும் நிகழ்வாக நடைபெற்றது. இதில் நியூஸ்7 தமிழின் நிர்வாக இயக்குநர் வை.சுப்பிரமணியன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இயக்குநர் அமீர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Image

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், கலை ரத்னா விருது இயக்குநர் வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் இலக்கிய ரத்னா விருது, எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பனுக்கும், விளையாட்டு ரத்னா விருது, பேட்மிண்டன் வீரர் சங்கர் முத்துசாமிக்கும், வேளான் ரத்னா விருது, ஒட்டு தென்னை நாற்றுப் பண்ணை உமாபதிக்கும், மருத்துவ ரத்னா விருது, டாக்டர் முத்து சரவணகுமாருக்கும், வழங்கப்பட்டது.

வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு ரத்னா விருது, மூத்த அரசியல்வாதியும், சுதந்திர போராட்ட வீரருமான குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது.

Image

மேலும் சக்தி ரத்னா விருது, கொரோனா பேரிடர் காலத்தில் சமூக தொண்டாற்றிய தன்னார்வலர் கலைவாணிக்கும், கல்வி ரத்னா விருது சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், திறன் ரத்னா விருது, தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்கத் தலைவர் துரை N.பாண்டியனுக்கும், மகளிர் ரத்னா விருது, ராசிபுரம் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் சசிரேகா சதீஷுக்கும், யுவ ரத்னா விருது, YourBakers நிறுவனத்தலைவர் கிருஷ்ணராஜுக்கும் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.