நேத்து தான ஸ்கூலுக்கு போனேன், இன்னைக்கு போகணுமா? ஒரு உடம்பு சரியில்லாத குழந்தைய இப்படி பாடு படுத்துறீங்களே இது நியாயமா? என பள்ளிக்கு செல்ல மறுத்து அடம்பிடித்த சிறுவனின் வீடியோ வைரலாக பரவி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
எல்லாம் என் தலையெழுத்து என அழுது கொண்டே பள்ளிக்கு செல்ல புறப்பட்ட மகனை உனக்கு மட்டுமா என சிறுவனின் தாய் கேட்கவும் அதற்கு சிறுவன் ஆமாம் எனக்கே மட்டும் தான் தலையெழுத்து. நேற்று தானே பள்ளிக்கு போனேன் இன்னைக்கும் போகனுமா?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
என்னை ஏன் இப்படி கஷ்ட படுத்துறீங்க, ஒரு ஒடம்பு சரியில்லாத குழந்தைய இப்படி பாடுபடுத்துறீங்களே இது நியாயமா என அழுது கொண்டே சிறுவன் பேசுவதும் அதற்கு தாய் சிரித்துக் கொண்டே வண்டியில் ஏறு டைம் ஆகுது என சொல்ல மீண்டும் என் தலையெழுத்து என அழுதபடியே வண்டியில் ஏறி பள்ளிக்கு செல்ல தயாரான சிறுவனை உடன் இருந்த நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறுவனின் யதார்த்தமான பேச்சும், பள்ளிக்கு செல்ல மறுத்து அழுவதும் பலரின் பால்ய காலத்தை நினைவு படுத்துவதால் இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்து வைரலாக பரவி வருகிறது.
குறிப்பிட்ட சிறுவன் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து முழுமையாக அறியமுடியாத நிலையில் வீடியோவில் தெரியும் வாகனம் திருப்பூர் எண் கொண்டது என்பதால் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.