முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க புதிய கருவி பொருத்தம்

தமிழகத்தில் முதல் முறையாக சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தானியங்கி வெளிப்புற (aed) டிஃபிபிரிலேட்டர் கருவி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாரடைப்பால் பாதிக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் சென்னை சோழிங்கநல்லூர் சிக்னலில் AED எனப்படும் இந்த முதலுதவி கருவி வைக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது திடீர் ஏற்படும் மாரடைப்பால் எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் ஏற்படும். இது போன்ற சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்க போராடுபவர்களை காப்பாற்றும் வகையில், சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர் சிக்னல் பகுதியில், தாம்பரம் மாநகர காவல் துறையும் தனியார் தொண்டு நிறுவனங்களும் இணைந்து தானியங்கி வெளிப்புற (AED) டிஃபிபிரிலேட்டர் எனும் கருவியை, தமிழகத்திலேயே முதன்முறையாக சோழிங்கநல்லூர் சிக்னல் மற்றும் செம்மஞ்சேரி காவல் நிலையம் அருகில் வைத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கருவியானது சாலை விபத்துகளிலோ அல்லது மாரடைப்பாலே மூச்சு விட அவதிப்படுவோருக்கு முதல் உதவி செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறபடுகிறது. இந்த கருவி விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் மட்டுமே இதுவரை இருந்து வருகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக சாலையில் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். விபத்தில் பாதிக்கப்பட நபருக்கு உயிர் பிழைக்க 30 சதவீதம் தான் வாய்ப்பு உள்ளது என்ற நிலையில் இந்த கருவி மூலம் சிகிச்சை அளித்தால் 80 சதவீதம் வரை உயிர் பிழைக்க முடியும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த கருவியை அறிமுகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சாலை விதிகளை மதிக்காதோருக்கு எமதர்மன் வேடத்தில் சோழிங்கநல்லூர் சாலையில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த கருவி வெளிநாடுகளில் 15 கிலோ மீட்டருக்கு ஒன்று இருக்கும் எனவும், அமெரிக்காவில் இருந்து இந்த கருவி வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து தமிழக நெடுஞ்சாலைகளில் காவல்துறையோடு இணைந்து இந்த கருவியை அமைப்பதற்கான பணியில் ஈடுபட போவதாக தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளது. இந்நிகழ்வில் தாம்பரம் மாநகர காவல் துறை கூடுதல் ஆனையார் காமினி மற்றும் இனை ஆணையர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர்தல் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை!

EZHILARASAN D

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அன்றும் இயங்கும்!

EZHILARASAN D

பேருந்து நிலையத்தில் மாணவிகளுக்கிடையே மோதல்

EZHILARASAN D