முக்கியச் செய்திகள் தமிழகம்

2026 தேர்தலில் 60 இடங்களில் வென்றால் பாமக ஆட்சி: ராமதாஸ்

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களில் வெற்றி பெற்றால் பாமக ஆட்சியை கைப்பற்றலாம் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் இணையவழியில் நடைபெற்ற பாடாண்தினைக் கவியரங்கத்தில் பேசிய அவர், பாமக வழங்கிய அழுத்தத்தால்தான் 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றால் கூட்டணி வேண்டாம் என அவர் தெரிவித்ததாகவும் கூறினார். மேலும், வரும் காலத்தில் 15% உள் இடஒதுக்கீடு பெறுவதே லட்சியம் எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக 60 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை கைப்பற்றலாம் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், தமிழ் எங்கும் இல்லாத சூழல் உருவாகி உள்ளது என்று கூறிய அவர், தமிழ் நாட்டில் தமிழ் உள்ளது என நிரூபிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தருகிறேன் என்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் மது விலக்குக்காக நாம் கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா காலத்தில் படிப்பினைகள் கிடைத்துள்ளன: வெங்கையா நாயுடு

Ezhilarasan

மத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது: எல்,முருகன்

Saravana Kumar

மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் வசூல்!

Saravana Kumar