தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார்: திருமாவளவன்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி…

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை பிரதமர் மோடி மேற்கொள்ள மாட்டார் என நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இன்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளது. இதற்காக டெல்லிக்கு சென்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரியில் மேகதாது அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் எனக் கூறினார். தமிழ்நாட்டிற்கு எதிரான கர்நாடக அரசின் நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.