கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் டிசம்பர் மாதத்தின் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே நேற்று முன் தினம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,03,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,900க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால், தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்த நிலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.220 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,04,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.12,000 அதிகரித்து ரூ.2,87,000க்கும், கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.287க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







