திருச்சிற்றம்பலத்தில் இடம் பெற்றிருக்கும் தேன்மொழி பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.
தனுஷ் நடித்து வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற தேன்மொழி பாடல், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் என சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. தனுஷ், நித்யா மேனன், ராஷிக்கண்ணா, பிரியாபவானி ஷங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளத்தை கொண்டு இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பெரிய ஆரவாரங்களின்றி கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலிலும் ரசிகர்களின் நாடித்துடிப்பை இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் எகிற வைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்னரே அனைவரின் ரிங்டோனாகவும் திருச்சிற்றம்பலம் பாடல்கள் ஆளத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, யதார்த்தமான வரிகளை கொண்டு தனுஷ் எழுதிய தேன்மொழி பாடல்கள், இளைஞர்களுக்கு மீண்டும் கேட்ட தூண்டும் பாடலாக உள்ளது. இந்த பாடலை வைத்து ரீல்ஸ், மீம்ஸ் என இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். இப்படி, பலருக்கு மிக பிடித்த பாடலாக திருச்சிற்றம்பலத்தின் இந்த பாடல் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. “நமக்கு இப்படி தோழி கிடைக்கமாட்டார்களா” என்று எங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ள நித்யா மேனனின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. இதனால், ஷோபனா, பலம் கதாபாத்திரத்தின் உறவை மீம்ஸ் மூலமாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.







