திருச்சிற்றம்பலம்: டெலிவரி ஊழியர்களுக்கு பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியான நிலையில் தனுஷ் ரசிகர்கள் டெலிவரி ஊழியர்ளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா…

திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியான நிலையில் தனுஷ் ரசிகர்கள் டெலிவரி ஊழியர்ளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கினர்.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி, சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ் திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய நான்கு படங்கள் ஒ,டி,டி தளங்களில் வெளியானது. ஆனால் திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் பிளக்ஸ் போர்டுகளை வைத்து திருச்சிற்றம்பலம் படத்தை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து ஊழியர்கள் படும் துயரத்தை இப்படத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள டெலிவரி செய்யும் ஐம்பது ஊழியர்களுக்கு தனுஷ் ரசிகர்கள் இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி கௌரவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.