இந்த நிலையில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 46 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி பேட்டிங் செய்து வருகிறது.







