12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில், இந்தியா – பால்கிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழந்து 240 ரன்களை எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக இந்திய அணியில் அதிகபட்சமாக ஆரோ ஜார்ஜ் 85 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 41.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹூசைபா அஹ்சான் 70 ரன்கள் குவித்தார். இதன்மூலம், பாகிஸ்தான் அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.







