மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை – மாணவர்கள் போராட்டம் வாபஸ்!

மத்திய அரசுடனான மூனறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சிஜேபி அறிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகனார்.

இந்த நிலையில் இன்று கரப்பான் பூச்சி கட்சியினர் அமைச்சர் ஜே.பி. நட்டாவுடன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் சிஜேபி கட்சி நிர்வாகிகள் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சிஜேபி நிர்வாக அசுதோஷ் ரங்கா, “நீட் வினாத்தாள் கட்சி விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் போராடி இருந்தோம் எங்களுடைய முதல் கோரிக்கை நிறைவேறியுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய சிஜேபி செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ், “டெல்லி மற்றும் பாஜக அலுவலகம் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது எந்த ஒரு வழக்கம் பதிவு செய்யக்கூடாது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற வேண்டும் என்பது என்னுடைய இரண்டாவது கோரிக்கையாக இருந்தது. அதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே போராட்டத்தை முடித்துக்கொள்வதாக” கூறினார்.

இதனையடுத்து பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, “காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் உடன்பாடு இயக்கப்பட்டது அவர்களுடைய இரண்டு கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடத்திய அனைத்து மாணவர்கள் இளைஞர்கள் மீதான முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்குகள் திரும்பப் பெறப்படும். நீட் விவகாரத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை என்பது அரசியல் செய்யப்பட்டு அரசால் சட்டபூர்வமாக எவ்வளவு நிவாரணம் வழங்க முடியுமோ அதனை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.