கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா! – மாணவர்கள் போராட்டம் வெற்றி!

மாணவர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் எற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் 20 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தநிலையில் டெல்லி போலீசார அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 20-ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் அன்றைய தினம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை நடத்தினர். அப்போது ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணியைத் தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆதரவாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பல மானவர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, கேரளா, கொல்கத்தா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனிடையே கரப்பான் பூச்சி கட்சியினர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தேர்வு குளறுபடிகளுக்கு பொருப்பேற்று கல்வி அமைச்சர் தர்பேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் மறு தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனிடையே நாடு முழுவதும் போராட்டம் தீவிர மடைந்ததால் பிரதமர் மோடி மாணவர்களின் கோரிக்கை குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என வீடியோ வெளியிட்டார். அதன்படி இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும் நீட் மறுதேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பிடு வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இரண்டு கோரிக்கைகள் குறித்து 4 நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்ததால் கரப்பான் போச்சி கட்சியின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.