டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாம செய்தார்.
இந்தநிலையில் டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “ இந்தியாவுடைய கல்வி முறை முன்பு சிறந்ததாக இருந்தது, நமது கல்வி முறைதான் நமக்கு கவுரவமாக இருந்தது. ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அதனை திட்டமிட்டு சீர்குலைக்க முயற்சி நடந்து வருகிறது. இந்தியாவின் கல்வித்துறையை ஆர்எஸ்எஸ் கைப்பற்ற முயல்கிறது. இந்தியாவின் கல்வி முறையில் சீர்திருத்தம் கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப் படபட்டதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம். இது தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் கூறினார்.




