திண்டிவனம் மரக்காணம் பகுதியில் உள்ள அனுமன் ஆலயத்தில் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில்
சித்திரை 1 ஆம் தேதி நடக்கும் லட்ச தீப திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.
காலை ஆஞ்சினேயருக்கு சந்தனக்காப்பு மற்றும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு
பூஜைகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் பொதுமக்கள் லட்ச தீப திருவிழாவில் கலந்து கொண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். அதிக
அளவில் பொதுமக்கள் திரண்டதால் மரக்காணம் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
— ரெ.வீரம்மாதேவி
மரக்காணம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீபத்திருவிழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திண்டிவனம் மரக்காணம் பகுதியில் உள்ள அனுமன் ஆலயத்தில் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி…






