பீகார், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி பீகாரில் உள்ள பங்கிப்பூர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள தாட்டியா, குஜராத்தில் மஞ்சள்பூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழ் நாட்டிற்கு எப்போது…?
இந்த சூழலில் தமிழ் நாட்டில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி, அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகள் என மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கான இடைத்தேர்தல் தொடர்பான எந்த தகவலும் இல்லை.




