பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

பீகார், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன் படி பீகாரில் உள்ள பங்கிப்பூர், மத்தியப்பிரதேசத்தில் உள்ள தாட்டியா, குஜராத்தில் மஞ்சள்பூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதில் பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான நிதின் நபின் சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.யானார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி ஜூலை 6 ஆம் தொடங்கி 13 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுவை ஜூலை 16 ஆம் தேதிக்குள் திரும்ப பெறலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.