பரமக்குடியில் அம்மனுக்கு பாலபிஷேகம் ! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பரமக்குடி அருள்மிகு உய்யவந்தாள் அம்மன் ஆலய பால்குட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் சுமந்து நேரத்திகடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆண்டி பண்டாரத்தார் சமூக நலச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீஉய்ய…

பரமக்குடி அருள்மிகு உய்யவந்தாள் அம்மன் ஆலய பால்குட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் சுமந்து நேரத்திகடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆண்டி பண்டாரத்தார் சமூக நலச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீஉய்ய வந்தாள் அம்மன் ஆலய பால்குட விழா வெகு
சிறப்பாக நடைபெற்றது. கடந்த 5ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை பொங்கல் வைத்து அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று பால்குட விழாவானது நடைப்பெற்றது. பரமக்குடி வைகை ஆற்றிலிருந்து புறப்பட்டு எமனேஸ்வரம் வரை பால்குடத்தை தலையில் சுமந்து உய்யவந்தாள் அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அலகு குத்துதல், வேல் காவடி, இளநீர் காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திகடனை செலுத்தினர். பின் பக்தர்கள் சுமந்து வந்த பால்மூலம் அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஶ்ரீஅகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.