உலகெங்கிலும் ரசிகர்களை அள்ளிக் குவித்த ’ஜான் விக்’ திரைப்படத் தொடரின் நான்காம் அத்தியாயம் எப்படி இருக்கிறது என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஜான் விக் 3 ஆம் பாகத்தை தொடர்ந்து தற்போது 4 ஆம் பாகம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மேட்ரிக்ஸ், ஜான் விக், கான்ஸ்டன்டைன் படங்கள் மூலமாக உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்களை குவித்த கீனு ரீவ்ஸ், ஜான் விக் 4 ஆம் பாகத்திலும் அசத்தியுள்ளார். சாட் ஸ்டாஹெல்ஸ்கி இந்த படத்தை இயக்கியுள்ளார். டோனி யென், பில் ஸ்கார்ஸ்கார்ட், ஹிரோயுகி சனாடா, இயன் மெக்ஷேன், ஷமியர் ஆண்டர்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆக்ஷன் காட்சிகளை அதிகம் ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும். படம் தொடங்கியது முதல் இறுதிவரை ஆக்ஷன், ஆக்ஷன், ஆக்ஷன் மட்டுமே உள்ளது.
ஜான் விக்கை கொலை செய்பவர்களுக்கு பல மில்லியன் பரிசு அறிவிக்கப்படுகிறது. அவரை கொலை செய்ய அவரது முன்னாள் நண்பரும் முயற்சி செய்கிறார். கொடூரமான கொலையாளிகள் பலரும் ஜான் விக்கை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். ஜான் விக் அவர்களிடமிருந்து உயிர் பிழைக்கிறாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
இதையும் படியுங்கள் : மீண்டும் ’பாபா யாகா’ – மாஸ் காட்டிய ’ஜான் விக் 4’ பாக்ஸ் ஆபீஸ் ஓப்பனிங்!
இதற்கு முந்தைய பாகங்களை ஒப்பிடும்போது இந்த படத்தில் அதிக அளவில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் நடக்கும் கன் ஃபைட்ஸ் தத்ரூபமாக நடப்பதை போலவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஹீரோ கீனு ரீவ்ஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பை பற்றி சொல்ல தேவையில்லை. அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த அளவுக்கு நடிப்பில் அட்ராசிட்டி செய்துள்ளார். அவரை போல மற்ற கதாப்பாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்துள்ள டோனி யென் கதாப்பாத்திரம் படத்திற்கு வலு சேர்க்கிறது. அதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக நடித்துள்ள பில் ஸ்கார்ஸ்கார்ட் வில்லத்தனத்தில் அசத்தியுள்ளார். அதிலும் அமைதியாக எல்லா இடங்களிலும் நம்மை அதிர வைத்துள்ளார். பேக்ரவுன்ட் மியூசிக், படத்திற்கு பெரிய பிளஸ். அதிலும் சண்டைக்காட்சிகளில் சிறப்பான இசையை கொடுத்துள்ளனர்.
முதல் பாதி சற்று மெதுவாகவும் இரண்டாம் பாதி வேகமாகவும் கதை நகர்ந்தது. முதல் பாதி ஆக்ஷன் காட்சிகளாகவும், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளாகவே கதை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆக்ஷன் படங்களை போலவே இந்த படத்திலும் லாஜிக்கல் மிஸ்டேக் நிறைய உள்ளது. சண்டை காட்சிகளிலும் அது தெளிவாக வெளிப்படுகிறது என்பதே படத்திற்கு நெகட்டிவ்வாக உள்ளது. அதைத்தாண்டி பெரிய அளவிற்கு குறை எதுவும் இல்லை.
படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை இயக்குனர் சிறப்பாக வடிவமைத்துள்ளார். அதே நேரத்தில் மற்ற ரசிகர்களுக்கு இந்த படம் சற்று வெறுப்பை ஏற்படுத்தலாம். படம் தொடங்கியது முதல் இறுதிவரை சுத்தி சுத்தி சுட்டுக்கொண்டே உள்ளனர். ஆக்ஷன் படம் என்றாலும் இந்த அளவிற்கு சண்டைக்காட்சிகள் இருந்தால் மற்ற ரசிகர்களுக்கு சற்று வெறுப்பு ஏற்படும் என்பதையும் மறுக்க முடியாது.
ஜான் விக் (2014) முதல் பாகம் உலகளவில் $86 மில்லியனும், அதைத் தொடர்ந்து வந்த ஜான் விக்: அத்தியாயம் 2 (2017) $171.5 மில்லயனும், ஜான் விக்: அத்தியாயம் 3 – பாரபெல்லம் (2019) இல் $327.3 மில்லியனும் பெற்று சாதனை படைத்தது. அந்த வரிசையில் ஜான் விக் அத்தியாயம் 4 மிகப்பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
– தினேஷ் உதய்