‘டிரெயின்’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கன்னகுழிக்காரா’ வெளியானது….!

விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகி வரும் ‘டிரெயின்’ திரைப்படத்தின் முதல் பாடலான ’கன்னகுழிக்காரா’ தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ’தலைவன் தலைவி’ வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அவர் மிஷ்கின் இயக்கியுள்ள “டிரெயின்” என்ற திரைப்படத்தில்  நடித்துள்ளார். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் மிஷ்கினே இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

கலைப்புலி எஸ். தானு தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் ‘டிரெயின்’ படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

’கன்னக்குழிக்காரா’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு கபிலன் வரிகள் எழுதியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.