முக்கியச் செய்திகள் தமிழகம்

“அவைத் தலைவர் பதவியை சசிகலாவுக்கு கொடுக்கலாம்”: நாச்சியாள் சுகந்தி

சசிகலா விவகாரத்தில் முரண்படுகிறார்களா இபிஎஸ் – ஓபிஎஸ்? என்ற தலைப்பில் நடைப்பெற்ற நேற்றைய (25.10.2021) கேள்வி நேர விவாதத்தில் பங்குபெற்ற அரசியல் விமர்சகர் நாச்சியாள் சுகந்தி பேசியதாவது:

சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து வெளியில் வந்து ஏறக்குறைய 10 மாதங்கள் ஆகிவிட்டது. சர்ச்சைகளுக்கு இன்றுவரை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. சசிகலாவின் விடுதலைக்கு பிறகு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊரக உள்ளாச்சி தேர்தல்கள் நடந்துவிட்டது! ஆனால், தேர்தல் முடிவு என்பது சுத்தமாக அதிமுகவிற்கு சாதகமாக அமையவில்லை.

சசிகலா மார்ச் மாதத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆனால், அதன் பிறகு தொடர்ந்து தொண்டர்கள் ஆதரவாளர்களை தொலைப்பேசி வழியாக தொடர்ந்து தொடர்புக்கொண்டு பேசினார்! அதன் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியானது. சசிகலாவை பக்குவமாக செயல்படுவதாகவே நான் பார்க்கிறேன்.

 

தோழி, கணவர், சிறை என பல்வேறு இழப்புகளுக்கு பிறகும் ஒரு பெண்ணாக அரசியல் களத்தில் தொடர்ந்து போராடுகிறார். அப்படி போராடும்போது, அவரை எதிர்க்க நினைக்கும் அனைவருமே, குறிப்பாக D.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இவர்கள் எல்லோருமே சசிகலாவை முடிவின் எல்லையில் வைக்கவே நினைக்கிறார்கள். அப்படியானால், இவர்கள் எல்லோரும் யாருடைய ஆதரவாளர்கள் என்று பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

இரண்டாவது – சசிகலா கட்சிக்குள் வருவதால் யார் அதிகம் பதட்டம் ஆடைகிறார்கள் என்றும் நாம் பார்க்க வேண்டியுள்ளது! இங்கு “யார் அதிகம் நட்டம் அடைகிறார்களோ, அவர்களே அதிகம் பதட்டம் அடைகிறார்கள்”.

குறிப்பிட்ட சாதி கட்டுக்குள் செல்லும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது! அப்படியானால், தென்மாவட்ட தேர்தல் முடிவை வைத்து பார்க்கும்போது இ.பி.எஸ் சாதி கட்டுக்குள்தான் கட்சி உள்ளது என்று எடுத்துக்கொள்ள முடியுமா என்ன?

இரட்டை தலைமை இங்கு உறுதியாக இல்லை என்பதே நடந்துமுடிந்த இரண்டு தேர்தல்களின் முடிவில் இருந்து பார்க்கமுடிகின்றது. சசிகலா கட்சிக்குள் நுழைய கூடாது என்பதனை இ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் விருப்பம்.

கே.பி.முனுசாமி ஒரு கருத்தையும், ஜெயக்குமார் ஒரு கருத்தையும் சொல்வதென்பது கட்சியின் பலவீனத்தையே காட்டுகிறது! குறிப்பாக கே.பி.முனுசாமி கட்சியின் சீனியர் அவர் இப்படி குறிப்பிடுவது என்பதெல்லாம் ஏற்புடையதாக இல்லை!

சசிகலா கட்சிக்குள் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் எல்லோரும், எங்கு நாம் சசிகலா தலைமையில் செயல்பட வேண்டி வருமோ என்ற அச்சமும் – நான்கு ஆண்டுகலாக சுகந்திரமாக கையில் வைத்திருந்த அனைத்துவகையான பண விடயங்களும் கையைவிட்டு போயிவிடுமோ என்ற அச்சத்தில்தான் பதற்றம் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஓ.பி.எஸ் மனைவி இறப்பின்போது சசிகலா அவரை சந்தித்து பேசினார், அவர் அப்போது என்ன வேண்டுமானாலும் பேசி இருக்கலாம், “மாற்றம் ஒன்றே மாறாதது”.

கட்சியின் தலைமை பொருப்பில் இருக்கும் 100 பேர் மட்டுமே முடிவு எடுக்க முடியாது! தொண்டர்கள்தான் டிசிசியன் மேக்கர்களாக இருக்க முடியும். கட்சி அமைப்பு சட்டத்தில் இடமில்லை என்ற கருத்தை இவர்கள் முன்வைக்க முடியாது. சட்டத்தில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்ய முடியும்!

சசிகலாவை பொதுச்செயலாளராகத்தான் கொண்டுவரவேண்டும் என்றில்லை, ஏன் மதுசுதனன் மறைவுக்கு பிறகு அந்த பதவி காலியாகத்தான் உள்ளது. அந்த பதவியில் கூடுதல் பொருப்புகளை அதிகாரங்களை கொடுக்கலாம். நிச்சயமாக சட்டத்தில் இடம் இருக்கும்.

அதிமுக தலைமையில் உள்ளவர்களே கட்சியை பலவீனம் செய்யும் கருத்துக்களை வெளிப்படுத்துவதால் ஆபத்து திமுகவுக்கோ மற்ற கட்சிகளுக்கோ இல்லை; ஆபத்து அதிமுகவின் இரட்டை தலைமைக்கும், மாறி மாறி பேட்டிக்கொடுக்கும் கட்சி நிர்வாகிகளுக்குத்தான்.

தொடர்ந்து கட்சி உடைவதை தடுக்க வேண்டுமானால், ஒற்றை தலைமை மட்டுமே சாத்தியமாகும். கட்சி வலிமை அடைவது மட்டுமே கட்சி உடைவதை தடுக்கும் இதனால் இவர்கள் விரைந்து முடிவை எடுக்கவேண்டும்.

Advertisement:
SHARE

Related posts

இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம்: அமைச்சர் சேகர்பாபு

Halley Karthik

பாக். பயிற்சியாளர் பதவியில் இருந்து மிஸ்பா, வக்கார் யூனிஸ் திடீர் விலகல்

Ezhilarasan

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் 10 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

Saravana Kumar