முக்கியச் செய்திகள் தமிழகம்

150 நாள் பரோல் நிறைவு; சிறையில் பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனின் 150 நாள் பரோல் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சுமார் 30 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தனது மகனை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் நன்நடத்தைக் காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு பேரறிவாளன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அவரது தாய் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, மே 28-ம் தேதி பேரறிவாளன் ஜோலால்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பேரறிவாலனுக்கு மூன்று முறை தலா ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் 150 நாட்களுக்கு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இன்றோடு பரோல் நிறைவடைய உள்ளதால், ஜோலார்பேட்டையில் இருந்து இன்று காலை பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement:
SHARE

Related posts

ஜெய்பீம்: அன்புமணிக்கு நடிகர் சூர்யா பதில்

Ezhilarasan

ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி: இஸ்ரோ

Ezhilarasan

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள படங்களை நீக்க உத்தரவு

Halley karthi