அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிமுக 66 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக உள்ளது. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 28ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் டெல்லி பயணமாகியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவும் ஓ பன்னீர்செல்வம், திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமருடனான சந்திப்பின்போது தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னையாக உள்ள மேகதாது அணை விவகாரம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.