தஞ்சை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக மாறும் என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்ணாற்றங் கரையில் உள்ள நீரேற்றுநிலையத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ராமநாதன், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு இந்த நீரேற்று நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது என்றார்.
கோடைகாலங்களில் தஞ்சை மாநகராட்சிப் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பணிகள் நடைப்பெறுகிறது என்றும், அடுத்த 30 ஆண்டுகளுக்குக் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாநகராட்சியாகத் தஞ்சை திகழும் என்றும் அவர் தெரிவித்தார்.
— சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: