சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண இன்று கட்டணம் வசூலிக்கப்படாது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்றைய தினம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.







