பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அரசியல் தலையீடு இருக்காது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக
கிட்டங்கியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரேசன்கடைகளில் வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், கிட்டங்கியில் உள்ள அரிசி, கோதுமை, சீனி எண்ணெய் ஆகியவற்றின் தரம்
குறித்து கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தது பேசிய அவர், பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை. ரேசன் கடை ஊழியர்கள் மட்டுமே வழங்குவர். இதில் அரசியல் தலையீடு இருக்காது என தெரிவித்தார்.
மேலும், கரும்பு கொள்முதலில் விவசாயிகளுக்கு கரும்புக்கு 33 ரூபாய் வழங்கப்பட்டு
வருகிறது. மழைக்காலங்களில் திறந்த வெளியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தானியங்கள் நனைவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கூரை வசதியுடன் 108 தானியக்கிடங்குகள் கட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அவர் பேசினார்.
அத்துடன், பிஜேபியினர் அரசியல் காரணங்களுக்காக பொங்கலுக்கு தேங்காய் வழங்க சொல்லி போராடி வருகின்றனர். தமிழக முதல்வர் நியாய விலை கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க ஆலோசனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ரேஷன் கடையில் நியமிக்கப்படும் நியமனங்களில் ( Tnpsc) அரசு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யும் எண்ணம் இல்லை. ரேஷன் கடை நியமனங்களில் அதிமுக ஆட்சியில் இருந்த நிலையே தொடரும் என்றும் அவர் கூறினார்.