முக்கியச் செய்திகள் சினிமா

உலகளவில் முதலில் வந்த ‘கடைசி விவசாயி’

கடைசி விவசாயி’ திரைப்படம் ‘Letterboxd’ என்ற திரைப்பட தரவுத்தளத்தில், எந்த இந்தியத் திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது.

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கி, தயாரித்த படம் ‘கடைசி விவசாயி’. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்திருந்தார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியானது. கிராமத்தில் கடைசியாக விவசாயம் செய்து வரும் விவசாயி ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை வெகுவாக கொண்டாடினர். ‘குறிப்பாகக் கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட உலகின் மிகச் சிறந்த படம்’ என இயக்குநர் மிஷ்கின் பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து ‘கடைசி விவசாயி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பலரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டைத் தாண்டி உலகம் முழுவதும் இப்படம் பலரின் கவனத்தைப் பெற்றது.

இந்நிலையில், ‘கடைசி விவசாயி’ திரைப்படம் ‘Letterboxd’ என்ற திரைப்பட தரவுத்தளத்தில், உலக அளவில் சர்வதேச திரைப்படப் பிரிவிலும், Drama Genre பிரிவிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

மேலும் 2022-ல் வெளியான ஒட்டுமொத்த திரைப்படங்களின் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்திலும் உள்ளது. இதுவரை எந்த இந்தியத் திரைப்படமும் செய்யாத சாதனையை ‘கடைசி விவசாயி’ செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்

Web Editor

காதல் விவகாரத்தில் தாய் மற்றும் மகன் உயிரிழப்பு!

Jeba Arul Robinson

ஷமி – பும்ராவின் அதிரடி ஆட்டம்; இந்திய அணி அபார வெற்றி

G SaravanaKumar