மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். அப்போது சுமார் அரை மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது கோவிலில் உள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால் 10 நிமிடம் கழித்து மின்சாரம் வந்தது.
இது தொடர்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரையிடம் கேட்ட போது அதிமுக பொதுச்செயலாளர் சாமி தரிசனம் செய்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டதாகவும், ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. சாமி கூட கும்பிட முடியவில்லை. மீனாட்சியம்மனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோதே மின்வெட்டு ஏற்பட்டது. மின்தடை ஏற்படுவதற்கு, கோயிலில் மின்தடை ஏற்பட்டதே சான்று.




