இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதற்கட்டமாக இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், நியூசிலாந்து, இந்தியா இடையேயான 4வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.




