முக்கியச் செய்திகள் இந்தியா

ராகுல் காந்தி பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை- துணை ராணுவம் பதில்

இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை என காங்கிரசுக்கு துணை ராணுவம் பதிலளித்துள்ளது.

வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையிலும், மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்றும் திரட்டும் வகையிலும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி “இந்திய ஒற்றுமை” நடைபயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, என பல்வேறு மாநிலங்கள் வழியாக 100 நாட்களை கடந்து தொடரும் “இந்திய ஒற்றுமை” பயணம் தற்போது தலைநகர் டெல்லியை அடைந்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனிடையே, ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியிருந்தது.

இதற்கு பதிலளித்து துணை ராணுவம், ராகுல் காந்தியின் பாதுகப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும், ராகுல் காந்தி பல சந்தர்ப்பங்க்ளில் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாகவும் இது தொடர்பாக அவ்வப்போது ராகுல் காந்தி தரப்பிடம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையை துவக்கினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

G SaravanaKumar

“வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது”; ஹெச்.ராஜா

Halley Karthik

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

EZHILARASAN D