முக்கியச் செய்திகள் தமிழகம்

புத்தாண்டை முன்னிட்டு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் -காவல்துறை

புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மறுநாள் நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதேபோல் நாளை மறுநாள் இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என தெரிவித்துள்ள காவல்துறை, புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

மேலும் புத்தாண்டின் போது பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்களை காவல்துறைக்கு பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறை உறுதி அளித்துள்ளது.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ள காவல்துறை, வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு சுமார் 90 ஆயிரம் காவல்துறையினர், 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் வாகனச் சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் கூறிய கடைசி வார்த்தைகள்

Arivazhagan Chinnasamy

“கூலாக இல்லாவிட்டால் அரசியலில் 20 வருடங்கள் இருந்திருக்க முடியாது” – ஆளுநர்

Halley Karthik

தமிழ்நாடு பட்ஜெட்: 1 ரூபாயில் வரவும், செலவும்…

Jayasheeba