முக்கியச் செய்திகள் இந்தியா

விபத்துகளில் உயிரிழந்த 83% பேர், சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் – மத்திய அரசு

2021-ம் ஆண்டு நாடு முழுவதும் நேரிட்ட விபத்துகளில் உயிரிழந்த 83 சதவீதம் பேர் காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்த 19 ஆயிரத்து 811 பேரில் 16 ஆயிரத்து 397 பேர் காரில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் பேர் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என்றும், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் சீட்பெல்ட் அணியாமல் காரில் பயணித்த 3 ஆயிரத்து 863 பேர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் ஆயிரத்து 737 பேரும், ராஜஸ்தானில் ஆயிரத்து 370 பேர் சீட்பெல்ட் அணியாமல் சென்றதால் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 45 சதவீதம் பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 6 ஆயிரத்து 445 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் பலியானதாகவும்,தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 888 பேரும், ராஜஸ்தானில் 4 ஆயிரத்து 966 பேரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் மரணமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதாசரிகளில் இறப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நேரிட்ட சாலை விபத்துகளில் 64 சதவீதம் பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 74 சதவீதம் பேர் மூளை சாவு அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரோஹித், தினேஷ் அதிரடி.. இந்திய அணி அபார வெற்றி..!

Web Editor

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: அண்ணாமலை இரங்கல்!

Web Editor

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது – வி.கே.சசிகலா விளக்கம்

EZHILARASAN D