மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பவசராஜ் பொம்மை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடக அரசிற்கே சட்டம் சாதகமாக உள்ளதாக கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து அனுமதிபெற்று விரைவில் அணை கட்டப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில், பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்த அவர், குடிநீருக்காகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டிற்குத் தான் பயன் எனவும், கூறினார். காவிரியின் உபரி நீரை பயன்படுத்திக்கொள்ள கர்நாடக அரசுக்கு உரிமை உள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.







