சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அரசுப் பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை அதிக அளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத சூழலில், அரசுப்பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று ஆர்வமுடன் கல்வி தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்துகிறார்களா எனவும் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.








