முக்கியச் செய்திகள் தமிழகம்

ஹெல்மெட் அணியாமல் வந்தால் எந்த சேவையும் கிடையாது: கரூர் ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என்று மாட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பல்வேறு தரப்பினருடனனான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில், அனைத்துத் தரப்பிலும் ஒருங்கிணைந்து இயக்கமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உணவகங்கள், ஜவுளி, நகைக்கடைகள், பெட்ரோல் பங்குகள், தொழிற்சாலைகள் என எந்த ஒரு இடத்திற்கும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கும் வரும் 18ஆம் தேதி முதல் எந்த ஒரு சேவையும் வழங்கப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து பகுதிகள், நிறுவனங்களின் முகப்புகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்: நாராயணசாமி

Ezhilarasan

வரலாற்று நிகழ்வுகளை ஒன்றிய அரசு அழிக்கப் பார்க்கிறது: துரை.வைகோ குற்றச்சாட்டு

Arivazhagan CM

ஆஸி.சுழல் லியான் அசத்தல் சாதனை: எலைட் லிஸ்டில் இணைந்தார்

Ezhilarasan