என்எல்சிக்கு புதிதாக நிலங்கள் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

என்.எல்.சி. நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை எனவும், உரிய முறையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம்…

என்.எல்.சி. நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் சூழல் தற்போது இல்லை எனவும், உரிய முறையில் இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கான
உயர் இழப்பீடு எனும் கருணைத்தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இதில் வேளாண்
மற்றும் உலக நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 2006
முதல் 2013 ம் ஆண்டு வரை என்எல்சிக்கு நிலம் கொடுத்த 9 பேருக்கு உயர் இழப்பீட்டுத் தொகையாக 23.3லட்சத்தை வழங்கினார்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம், என்.எல்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், ஏற்கனவே அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேவையான 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய விவசாயிகள், நிலம் கொடுத்தவர்கள் கூடுதல் இழப்பீடு கேட்கின்றனர். அவர்களுக்கு திருப்திகரமான முறையில் இழப்பீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. என்எல்சி நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல.

ஏற்கனவே 3 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க என்எல்சி ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் என்எல்சிக்கு புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்பொழுது இல்லை என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.