31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பல்கலைக்கழகங்களில் தொலைநிலை படிப்புகளுக்கான அங்கீகாரம்- 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைநிலை கல்வியில் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற வரும் 15 -ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என யுஜிசி அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, பல்கலைகழக மானிய குழுவான யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களும், திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வியிலும், ‘ஆன்லைன்’ வழியிலும், பட்டப் படிப்புகளை நடத்த, யுஜிசியில் முறையான அங்கீகாரம் பெற வேண்டும். வரும் 2023-24 ம் கல்வியாண்டில், பல்கலை கழகங்கள் தொலைநிலை படிப்பை நடத்த, வரும் 15ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை https://deb.ugc.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி :மலேசியாவின் பினாங்கு – சென்னை இடையே நேரடி விமான சேவை – நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சகம் அறிவுரை

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பட்டப்படிப்புகளோடு கூடுதலாக பாடப்பிரிவுகள் துவங்க விரும்பினால் அதனையும் குறிப்பிட வேண்டும்.  இணையதளம் வழியே விண்ணப்பித்த பின், அதன் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் அசல் உறுதிமொழிக் கடிதம் ஆகியவற்றுடன்,இணைச் செயலாளர், தொலைதூரக் கல்விப் பணியக முகவரிக்கு ஏப்ரல் மாதம் 15க்குள், யுஜிசிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.மேலும், விண்ணப்பம் அளிப்பதால் மட்டும் அங்கீகாரம் பெற்றதாக கருதப்படாது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

கொல்கத்தாவை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்!

G SaravanaKumar

புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – ஜூன் 14-ல் திறக்கப்படும் என அறிவிப்பு

Web Editor

இடி, மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

G SaravanaKumar