அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும், உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் பாஜக போட்டியிடும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி ஆகியோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது பிரதமர் மோடியின் பெருந்தன்மையை காட்டுகிறது எனக்கூயதோடு நீட் தேர்வு மற்றும் வேளாண் சட்டங்களை ஒன்றாக ஒப்பிட முடியாது எனவும், அரசியல் ஆதாயத்திற்காக, எதிர்க்கட்சிகள் நீட் விஷயத்தை பெரிதுபடுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட பா.ஜ.க விரும்புகிறது எனவும், அ.தி.மு.க, கூட்டணியில் சுமூக உறவு உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.








