புதுச்சேரி முதலமைச்சருடன் எந்த மோதலும் இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நெல்லையப்பர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“புதுச்சேரிக்கு கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரூ.2000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 65,000 பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது காலதாமதம் ஆகிறது.
புதுச்சேரியில் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் முதலமைச்சர் அவ்வாறு பேசி இருக்கலாம். ஆனால் அவருடன் மோதல் எதுவும் இல்லை. நீதிமன்றத்தில் தடையாணைகளும் வழிகாட்டுதல்களும் உள்ள காரணத்தினால் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியவில்லை. இதே பிரச்னை தமிழ்நாட்டிலும் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் விரைவாக பணி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குலசேகரபட்டினத்தில் அமைய உள்ள ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் 10000 முதல் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. தூத்துக்குடியில் மக்களவை வேட்பாளராக போட்டியிட்டபோது தூத்துக்குடிக்கு புல்லட் ரயில் கொண்டு வருவேன் என அறிவித்தேன். தற்போது ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. தென் தமிழ்நாட்டில் இருந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.