“தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது!” – சி.பி.ராதாகிருஷ்ணன்

கர்நாடகாவை சேர்ந்தவர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமர் ஆகும்போது தமிழரும் பிரதமர் ஆகலாம் என குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்த போதி 2 முறை மின்வெட்டு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழர் ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளதா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், “ ”தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர், குஜராத்தை சேர்ந்தவர் பிரதமர் ஆகும்போது தமிழரும் பிரதமர் ஆகலாம். ஒருநாள் தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார். பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் இருவரின் ஆட்சி குறித்து நான் கருத்து கூற முடியாது. அதற்கு பல அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இந்தியா வல்லரசு நாடாவதை என்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.