திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் பொதுமக்கள் அச்சம்!

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு முன்பு பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.  குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் மற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட அரசு…

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிணவறைக்கு முன்பு பல நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.  குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் மற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் தினசரி இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.  பிரசவாத்திற்காகவும் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்கள், அங்கு பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகள், ஆகியவை பிணவறைக்கு முன்பு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசும் நிலையில் சுகாதாரம் சீர்கேடு ஏற்படும் அச்சத்தில் மருத்துவமனை வளாகம் உள்ளது.  இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் உள்ளனர்.  மேலும் குப்பைகளை அகற்றி மருத்துவமனையை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.