சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன் கோயிலில் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர சிவன் கோயிலில் காரைக்கால்
அம்மையாருக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் மாங்கனி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காலையில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை உற்சவமூர்த்தி காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கலந்து கொண்ட பக்தர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் மாங்கனி வழங்கப்பட்டது.
கு. பாலமுருகன்







