உசிலம்பட்டி அருகே கரும்புகளுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

உழவர்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உசிலம்பட்டி அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கையில் கரும்புகளுடன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உழவர்கள் அவர்கள்…

உழவர்களுக்கான 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உசிலம்பட்டி அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கையில் கரும்புகளுடன் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் உழவர்கள் அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை செய்ய வேண்டும், கரும்பு டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3000 வழங்க வேண்டும்,  100 வேலை வாய்ப்புத்திட்டத்தை விவசாயத்திற்கு பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், முல்லை பெரியாறு அணையில் 152 அடியை தேக்கி தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்றாவது நாளாக கையில் கரும்புகளுடன் அரை நிர்வாணத்தில் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.