இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சி நடைபெறுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மைலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் வழுவூரார் நடனம் & இசை விழா
விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று விருதுகள்
வழங்கி வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விழாவிற்கு நான் வந்ததுதான் எனக்கு மிக பெரிய பெருமை. நாட்டிய உலகமாக இருந்தாலும், இசை உலகமாக இருந்தாலும் அதில் வழுவூரார் குடும்பத்திற்கு மகத்தான ஓர் இடம் உண்டு என்றார்.
குடும்பம் குடும்பமாக தலைமுறை தலைமுறையாக என்று சொல்லுகிற போது அரசியலில்
இருந்தால் வாரிசு என்று சொல்லிவிடுவார்கள் அதை விமர்சனமும் செய்து விடுவார்கள்
ஆனால் அதை எல்லாம் தாண்டி, இன்று இசைக்கும் நாட்டியத்திற்கும் தொண்டாற்றிய
குடும்பமாக வழுவூரார் குடும்பம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனின் மகள் குந்தவைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த
பாரம்பரியம் வலுவுரார் பங்கு உள்ளது. தலைவர் கலைஞர் அவர்களின் சங்கத்தமிழை இசைக் கோவையாக மாற்றுவதில் ஈடுபட்டவர் சாம்ராஜ். நாட்டிய சுடரொளி பத்மினி, பத்மா சுப்ரமணியம், வைஜெயந்தி மாலா பல கலைஞர்களை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், வழுவூரார் குடும்பத்திற்கு நன்றி சொல்ல நானும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய மகள் செந்தாமரை வலுவுரார் குடும்பத்தில் நாட்டையும் கற்றுக் கொண்டது. எனக்கு பெருமை ஏழு வயதில் இருந்து செந்தாமரை நாட்டியம் கற்றுக்கொண்டு வந்தார்.
9வது வயதில் சிதம்பரத்தில் நாட்டிய அஞ்சலியில் நடனமாடியுள்ளார், 14.8.96 ஆம்
செந்தாமரையின் நாட்டிய அரங்கேற்றமும் மூப்பனார் தலைமையில் இசைஞானி இளையராஜா முன்னிலையில் நடைபெற்றது. இயல் இசை ஆகியவற்றை வளர்க்கும் ஆட்சியாக திமுக உள்ளது. தமிழும் தமிழ்நாடு பல்லாயிரம் ஆண்டு காலம் நின்று நிலைக்க இத்தகைய கலைகள் அடிப்படை காரணம் என தெரிவித்தார்.
மேலும், எத்தனையோ படையெடுப்புகளை தமிழ்நாடு சந்தித்துள்ளது அத்தனையும் தாங்கி நின்று செழிக்க கலை இலக்கியங்கள் தான் காரணம். இந்திய விடுதலைக்காக வழுவூரார் நாட்டிய கலைகளை அன்றே பயன்படுத்தியது போல இன்று இருப்பவர்கள் தமிழைக் காக்கவும் தமிழ்நாட்டை காக்கவும் தங்கள் கலையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
புதிய புதிய கலைஞர்கள் உருவாவதைப் போல் புதிய பாடல்கள் இந்த மேடைகளில் ஒலிக்க
வேண்டும். நவீன கலைகளில் நவீன கருத்துக்கள் அறிவுபூர்வமான கருத்துக்கள்
பகுத்தறிவு கருத்துக்கள் சமூக மேன்மைக்கு மக்களை நல்வழி படுத்த வேண்டிய
கருத்துக்கள் இடம்பெற வேண்டும். நவீன எண்ணங்களையும் இந்த மேடையில் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் பேசினார்.