முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில் ட்ரோன் பறக்க தடை; காவல் துறை அதிரடி உத்தரவு

புதுச்சேரியின்  நகரப்பகுதிகளில் ட்ரோன் பறப்பதற்கு தடைவிதித்து புதுச்சேரி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் கடற்கரைசாலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளான
தலைமை செயலகம் மற்றும் பிரெஞ்சு துணைத்தூதரகம் அமைந்துள்ளது. நேற்று பிரெஞ்சு துணைத்தூதரகத்தின் மேல் இரண்டு ட்ரோன்கள் பறந்தபடி படம்பிடித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைக்கண்ட  தூதரக பாதுகாவலர்கள் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்த புகாரை தொடர்ந்து பிரெஞ்சு துணைத்தூதரகம் மேல் ட்ரோனை  பறக்கவிட்டவர்கள் யார் என்பது குறித்து புதுச்சேரி மாநில காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு கருதி புதுச்சேரி நகரில் வெள்ளை நகரப்பகுதிகளில் உள்ள
ஆளுநர் மாளிகை, சட்டமன்றம், தலைமை செயலகம், பிரெஞ்சு தூதரகம், அரவிந்தர்
ஆசிரமம், அருங்காட்சியகம் உள்ளிட்ட அதிமுக்கியமான இடங்கள் உள்ளிட்ட 8 காவல்
நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளை ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்ட  சிகப்பு மண்டலங்களாக காவல் துறை இன்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பகுதிகளில் தடையை மீறி ட்ரோன் பறக்கவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் காவல் துறை எச்சரித்துள்ளது. மேலும் பிரெஞ்சு துணை தூதரக போலீசாரும்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாளை முதல் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

EZHILARASAN D

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர்; பிரதமர் மோடி

G SaravanaKumar

இந்தியாவில் இன்னும் மனுதர்ம ஆட்சியே நடைபெறுகிறது – தொல்.திருமாவளவன்

EZHILARASAN D